வியாழன் கவிதை

வசந்தா ஜெகதீசன்

வீறுகொள்..
கடற்கோளின் காவுகையில்
முதற்கழகம் இடைக்கழகம்
மூழ்கியதே நூல்களெல்லாம்
மீதமென கடைக்கழகம்
தேக்கி வைத்த தேட்டமதில்
தேன்மதுரத் தமிழின்று
தேசமெல்லாம் ஆள்கிறது
முதல்மொழி யின் முகவரியை
முழுஉலகும் பதிகிறது

பாமுகத்தின் தேடல்களும்
பதிவழிந்து போயிடினும்
படிப்படியாய் வளர்ச்சி நிலை
பட்டறிவின் தெளிவு நிலை
விட்டகலா வெற்றி கொள்ளும்
வீரியத்தில் தமிழே வெல்லும்
தேடல்கள் வேகமாகும்
தேட்டங்கள் உலகை வெல்லும்
ஊக்கத்தின் உந்துசக்தி
ஆக்கத்தின் ஆற்றல் மிஞ்சி
அயராத உழைப்பின் உத்தி
அழிவினை புறம்தள்ளும்
ஆற்றலில் வீறுகொள்ளும்.
புரட்சியில் புதுமை செப்பும்.
நன்றி மிக்க நன்றி