வழியே..
சிறு சிறு துளிர்ப்பே ஆக்கம்
சிந்தை செதுக்கும் தேக்கம்
புரட்சிப் பாதை பூக்கும்
புதுப்புது வழியே ஊக்கம்
மொழியின் விருத்தி அறிவு
உலகின் பாதை செறிவு
உராய்ந்து செதுக்கும் உளியால்
ஒளிரும் சிலையே சாட்சி
வழியும் இதுவாய் ஒளிரும்
வலியை நீக்கி மிளிரும்
கலையும் மொழியும் கடைந்து
திரட்டும் நெய்யே ஆற்றல்
தீர்வாய் சுட்டும் விடியல்.
நன்றி