பூக்கட்டும் புன்னகை…
புன்னகை வதனம் பூக்குமா
புதுப்புது எண்ணத்தைக் கோர்க்குமா
அன்பினை ஆட்சியாய் செலுத்துமா
அகத்தின் ஆற்றல் நிலைக்குமா
எத்தனை கவலையின் விம்பங்கள்
சிலந்தியின் பின்னலாய் சிக்குமே
சிரிப்பின் வலுவே உடைத்திடும்
சிலகணமேனும் விலத்திடும்
மனிதத்தின் உரித்தே புன்னகை
மறுதலிப்பற்ற பொன்னகை
பருவத்தின் மாற்றத்தில் தருக்கள்
வெற்றுடல் காட்சியில் வரட்சி
உருவையே மாற்றி பசுமையைப் போர்த்தி
உலகே வாழ்ந்திட உதவுமே
புன்னகை வதனமும் புதுத் தென்பே
பூத்திடும் தருக்கள் போல் புரட்சி அம்பே.
நன்றி மிக்க நன்றி