சந்தம் சிந்தும் கவிதை

வசந்தா ஜெகதீசன்

சமூகமே…
சீர்கொண்ட ஒர்முகமாய்
செதுக்கலிடும் பண்பாடும்
செப்பனிடும் வாழ்வியலும்
பார் போற்றும் விழுமியமும்
ஒன்றிக்கும் பூந்தோட்டம்
ஒற்றுமையின் வேரோட்டம்
சமூகமெனும் சங்கமத்தில்
சஞ்சரிக்கும் மனிதமே
சாதனைப் பேரேடு
சரித்திர வரலாறு.

மிக்க நன்றி