ஆதியின் மரபு…
காலச் செதுக்கலில் கணதி பெருகுது
ஞாலமன்றிலே நவீனம் வளருது
கருவி உலகென காத்திடம் பெறுகுது
நடையது குன்றிட நோயும் நிறையுது
வாழும் வரவிலே வற்றாத நதி
ஆழம் நிறைந்தது ஆதியின் நெறி
உரலும் உழக்கையும் உடல்வள உறுதி
அம்மியும் குழவியும் உடற்பயிற்சியின் தகுதி
அரைத்த உணவு ஆரோக்கிய மிகுதி
விறகு அடுப்பின் ஊதும் கலையில்
சுவாசத்தின் பை சுருங்கி விரியுமே
காய்கறி கீரை இயற்கை உணவு
நோய்நொடியற்றதாய் நீண்டபொழுது
கிணற்றிலே நீர் அள்ளி இறைத்து
கிடைக்குமா இங்கு ஆதியின் மரபு
இயந்திர அடிமையாய் இயங்குதே வாழ்வு
நிரந்தர நிரம்பலில் நிறையுதே உலகு.
நன்றி
குரலிணைக்கும் சகோதரி க்கும், தட்டிக்கொடுப்பில் உற்சாகம் தரும்
நெறியாளருக்கும் மனமார்ந்த நன்றி.