சந்தம் சிந்தும் கவிதை

வசந்தா ஜெகதீசன்

பரவசம்…..
பாமுகப்பூக்கள் வசமாய்
பரவசமானோர் பலராய்
கவிதையின் ஈர்ப்பில் வரவாய்
காத்திடம் நிறையுது புதிதாய்

தாயின் பரிசம் உணர்வாய்
சேயாய் அணைக்கும் அகமாய்
பூரித்தே போற்றும் பரவசம்
பொங்கும் அன்பின் நிதர்சனம்

எதிர்பாரா நிகழ்வின் மகுடம்
எமக்காய் கிட்டும் தருணம்
பரவசமாகுமே இதயம்
பாரிலே பற்பல தருணம்!.
நன்றி

சந்தம் சிந்தும் கவிக்களத்திற்குப் பாராட்டுக்கள். நன்றி