வியாழன் கவிதை

வசந்தா ஜெகதீசன்

கொண்டாட்டக் கோலங்கள்…
பாரிலே பறைசாற்றும் பண்பாட்டு முரசம்
பயின்று நாம் சுமக்கின்ற பரிணாமம் கலசம்
நிலத்தோடு நித்தமும் நிகழ்வாகும் விழாக்கள்
நிறைந்திருக்கும் காரணத்தில் புதைந்திருக்கும் புதையல்
வந்தேறு தேசத்தில் வரலாற்றை நாட்டி
வரம்பிற்குள் கோலத்தை குறியீட்டு நிறுத்து
வருங்கால தலைமுறைக்கும் வகுத்தறிந்து துலக்கி
வழிதொடர வாய்ப்பளித்தால்
தலைமுறையின் வேள்வி
அறிவியலின் நுட்பத்தில் அகிலத்தின் விளக்கு
அனுதினமும் திரியீட்டு அவசியத்தை உணர்த்து
கொண்டாட்டக் கோலங்கள் கொண்டு வரும் திருப்பம்
குழந்தைகள் மனக்கண்ணில்
வேரூன்றும் விருட்சம்.
மிக்க நன்றி