சந்தம் சிந்தும் கவிதை

வசந்தா ஜெகதீசன்

பாமுகப் பூக்கள்..
ஐக்கியத்தின் கூட்டுறவுப் பிரசுரம்
ஐநான்கு கல்வியாளர் எழுத்துரம்
சந்தத்தின் கோர்ப்பிலே உலாவரும்
பாமுகத் தின் நிகழ்வில் ஒர்பலம்

மைத்துளியின் மகப்பேற்று கவித்துவம்
மதிப்போடு கவிஞர்கள் கவித்துவம்
உழைப்பீர்ந்த உருவாக்கப் பதிப்பகம்
உளமார்ந்த நன்றிக்கு சமர்ப்பணம்

பாமுகத் தின் தேட்டமாய் பாரிலே பூத்து
கவிஞர்கள் இருப்பதாய் ஒன்றித்த முத்து
வெளியீட்டு அரங்கத்தின் வெற்றிக்கு சான்று
வாழ்த்துக்களும், ஆய்வுகளும் நித்தி லமாய் நீண்டு.
பற்றுடனே பாமுகமே பாவையண்ணா பாராட்டு பணிந்து.
நன்றி
வசந்தா ஜெகதீசன்

அழகுச் செதுக்கி, அச்சகம் புகுத்தி, நேர்த்தியாய் மலரை நிறைந்த வேலைப்பணியுடன் தொகுத்து தொடர்ந்து அனுப்பி, விழா ஏற்பாட்டில் முன்னின்றுழைத்து முழுவெற்றி கண்ட பெருநிகழ்வாய் பார்த்து மகிழ்ந்தோம் பாராட்டுக்கள். பாவை அண்ணா குடும்பத்தினருக்கும், பதிப்பகத்திற்கும், வாழ்த்துரை, ஆய்வுரையாளர்கள் அனைவருக்கும். பாமுகத்தின் தொடர்உற்சாக பணிக்கும். மிக்க நன்றி முக்க நன்றி, மிக்க நன்றி.