பொங்கலிடுவோம் பூரித்தே..
தையின் நிமிர்வு தைரியப்பதிவு
உலகே புதிதாய் உதித்த வியப்பு
அறவில் நிமி ர்வோம் ஆற்றலில் உயர்வோம்
அறத்தை விதைப்போம் அன்பை மதிப்போம்
கடந்து போன வாழ்வின் பதிவு
மலர்ந்தே மகிழும் ஆண்டின் புதிது
நுகர்ந்து செல்லும் நறுமண வாசம்
நூற்கள் சொல்லும் அறிவியல் உலகம்
கலந்திடும் வாழ்வே கதம்பமாகும்
கசடற மொழிதல் கற்கையின் செதுக்கல்
தரணியில் பகலவன் நன்றிக்கு உரித்து
தன்னிலை மாற கதிரவன் போற்று
மரபுத் திங்கள் தையென
பொங்கலிடுவோம் பூரித்தே
புத்தாண்டு வரவில் ஒன்றித்தே.
தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி