வியாழன் கவிதை

வசந்தா ஜெகதீசன்

சுதந்திரமாமே…… .
ஆட்சித் செறிவின் அடித்தளம்
அகன்று போனது சுதந்திரம்
மீட்சிக்கான வீழ்ச்சியில்
மிடுக்கை இழந்தது தமிழினம்

வெற்றித் தொடுகை வீரச்செறிவு
புத்திக் கூர்மை நிறைந்ததமிழே
ஆண்ட நிலத்தை அன்னியர் பறித்தனர்
ஆங்கிலேயக் குடையை அகல விரித்தனர்
ஓன்றித்த வாழ்வென ஓரங்கம் பகிர்ந்தனர்
மீளவழங்கலில் காரியம் சிதைத்தனர்
ஆண்ட இனமது அடிமையானது
வேட்கை உடைந்தது வீரம் சிதைந்தது
மாட்சிமை மலிந்தது மண்ணினம் நலிந்து
நாளை சுதந்திரமாமே
எதற்காய் இது
விளக்கில் விட்டிலாய் வீழும்
எமக்கு எதற்காய் இது!
நன்றி
மிக்க நன்றி