சந்தம் சிந்தும் கவிதை

வசந்தா ஜெகதீசன்

விருப்பு…
விந்தை வியப்பில்
விழிக்கும் உலகில்
அறிவியல் மோதல்
அழகியல்த் தேடல்
அவரவர் அன்பில்
அகிலத் தோப்பே
அறிவின் ஊற்று
ஆயிரம் வானின்
விடியல் கீற்றில்
உடுக்கள் மின்னும்
நிலாவின் விசும்பே
நிறைந்த விருப்பே
நித்தில நிறைவு.
நன்றி

மிக்க மிக்க நன்றி
அனைவருக்கும் பாராட்டுக்கள்.