சந்தம் சிந்தும் கவிதை

வசந்தா ஜெகதீசன்

யோசி…
உருளும் உலகில்
நிகழும் வாழ்வு
நிதமும் நிரப்பும்
பட்டறிவே பகிர்வு
பாடமாய் யோசி
விட்டே அகன்ற
விரயத்தனமும்
வீணே போக்கும்
காலக் கரைவும்
பெற்றே தந்த
பேறுகள் யோசி
கற்றவை பெற்றவை
கடமையின் வழிகள்
உரைக்கும் பாடமே
உணர்வென யோசி
புலமை பூக்கும்
புதுமை யோசி
புரட்சி உலகை
புகுத்திட யோசி!
நன்றி