வியாழன் கவிதை

வசந்தா ஜெகதீசன்

பெருகிவிடும் வலிமை
பெற்றுயரத் தடையேது…
மறவர்நிலை வீரம்
மனதின் நிலை ஈரம்
வாழ்வின் நிலை பாரம்
வலிமை நிலை கூறும்
வலிகள் தடை பாடம்
வலுப்பெறுமே நாளும்
காயமது பெரிது
காலமது உறவு
ஞாலமது குடையே
நம்பிக்கை புடமே
நம்மை நாம் தீட்டும்
நல்லறிவு பலமே
பட்டறிவு திடமே
சுட்டிட சுட்டிட தங்கமே
ஒளிரும்
பட்டிட பட்டிட பாதைகள்
புலரும்
திடமிடும் உரத்தில்
பலம்பெறல் முறைமை
வலிமையின் வரத்தில்
வாய்ப்புக்கள் அருமை
தருணத்தை அறிந்து
தக்கவை உணர்ந்து
பெருகிவிடும் வலிமையில்
பெற்றுயர்வோம் புலமை
பேறுபெற்ற சமூகமாய்
வென்றுயர்வோம் வெற்றி!.
நன்றி