சந்தம் சிந்தும் கவிதை

வசந்தா ஜெகதீசன்

ஊக்கம்…
ஊக்கமது மூலதனம்
உருவாக்கத்தின் முதலீடு
ஆக்கமாய் பிரகாசித்து ஆற்றலாய் உலகாளும்
அனுதினமும் உராய்வாகி
ஆக்குசக்தி மிளிர்வாகும்
நீராக்கும் மின் போல
நிதமும் எம்மை புடமிடுமே
நிமிர்வின் வழி தென்படுமே
ஊக்கமது தேக்கமின்றி எம்மை நாம் ஆளுகின்ற விடியலின் வெற்றிப்புள்ளி
விடாமுயற்சியின்
முதலீடே!
நன்றி