சந்தம் சிந்தும் கவிதை

வசந்தா ஜெகதீசன்

வணக்கம்
ஆற்றல் மிகுநிறை
ஆளுமை வெகுமதி
போற்றும் புவியில்
பெண்மையின் நிதர்சனம்
நாளும் நாளுமாய்
நலிவும் மிளிர்வும்
ஏற்கும் பாங்கிலே
எண்ணற்ற புலமை
ஆற்றிடும் காரியம் அனைத்திலும் வலிமை
அடக்குமுறையை நீக்கிய எழுச்சி
எதிலும் பெண்ணின சமரச முயற்சி
பங்குகள் தகமையை பாங்குடன் ஏற்று
பரிணாமப் புரட்சியை பலமென ஏற்று
விடியலின் விண்மீன்களாய்
ஒளிரும் சுடர்கள்
அறிதலும் புரிதலும் ஆதங்கச்சுவடும்
இன்னுமாய் நீளினும் இடரினை இறுகப்பற்றியே எழுகை கொள் மகளிர் ஏற்றத்தைப் போற்றுவோம் புவியிலே!
நன்றி மிக்க நன்றி