சந்தம் சிந்தும் கவிதை

வசந்தா ஜெகதீசன்

விவசாயம்..
ஆணிவேராய் அகிலம் ஆளும்
அணிகலனாகி ஆட்சி செலுத்தும்
ஊற்றே உலகின் உயிர்நாடி
உணவே உயிரின் உளவாளி
காத்திடும் பேணும் காசினியில்
கதிரொளி வானே நன்கொடையே
விவசாயம் விளங்குதே விளக்காகி
நாளும் உற்பத்தி உணவாகி
நம்வாழ்வைக் காக்கும் உயிர்ப்பேடு.
நன்றிக்கு வித்தே விவசாயம்
நாளும் உற்பத்தி உபகாரம்.
நன்றி