வீறுகொள் விடியலே….
தகமை உரமிட தன்னிறைவு பலமிட
தண்ணொளி மிளிரும்
தரணியே மகிழும்
தன்னம்பிக்கை ஆற்றல்
பெண்ணினப் பெருமை
பேறுகொள் வரமே
மார்ச் எட்டு மகளிர் தினமே
மதியின் வலுவில் மாற்றத்தின்
உலகில்
எத்தனை புரட்சி எண்ணற்ற உயர்ச்சி
வலுப்பட வாழ்தலே வலிமையின் உறுதி
நேருக்கு நேராய் நிமிர்தலே தகுதி
பட்டங்கள் பலவென
பாடங்கள் அறிவென
சுட்டிட சுட்டிட பொன்னென ஒளிரும்
பட்டிட பட்டிட பாதைகள் புரியும்
அறிவின் வழியே அனர்த்தம் கழியும்
ஐக்கியத் தகமையில் அவனியாய் தாங்கி
உறங்கும் உரத்தின் இடுக்கண்
கலையும்
வழியின் வலியில் வற்றாத பொய்கை
வரங்கள் பலதை தாங்கிடும் அன்னை
காலம் போற்றிடும் காரிய மகிமையில்
ஞாலவிடியலில் நம்பிக்கை வேதம்
சாலச்சிறந்த சான்றிடை ஞானமே.
நன்றி. மிக்க நன்றி