வியாழன் கவிதை

வசந்தா ஜெகதீசன்

இப்போதெல்லாம்…
குன்றிப் போகுது செயல்களின் முனைப்பு
குறைந்தே போகுது வாழ்வின் பிடிப்பு
அருகியே போகுது அவரவர் அன்பு
ஆழம் குன்றுது அன்றாடத் தொடர்பு

இழந்தே போகுது நேரத்தின் மதிப்பு
இடராய் தைக்குது நாளை நிமிர்வு
சுடராய் ஏற்றுவோம் சூழலில் விளக்கு
சுற்றும் புவியில் காலமே கிழக்கு
மாற்றம் ஒன்றே மாறாத திறப்பு
மாறிடும் முகவரி மனிதத்தின் தகமை
ஆற்றிடும் செயல்கள் ஆளுமை
மிகுதி
அப்போது முதலாய் இப்போது வரையாய்
ஆகிடும் நியதியில் அகிலமே புதிதாய்
ஊன்றும் வேரே உலகாய் மிளிரும்
இப்போதெல்லாம் இயல்பில்
ஒன்றும்
இன்செயல் உவப்பே இங்கிதமாகும்.
நன்றி மிக்க நன்றி