சந்தம் சிந்தும் கவிதை

வசந்தா ஜெகதீசன்

பருவங்கள் பலதாய்….
காலமும் நேரமும் கணதியுறும்
காத்திடம் மிக்கதாய் வளர்ச்சிபெறும்
பருவங்கள் பலதாய் பயணிக்கும்
பற்பல மாற்றங்கள் மெய்ப்பிக்கும்
ஆண்டிலும் உண்டு அத்தாட்சி
அனுதின வளர்ச்சிக்கு பெரும்சாட்சி
மனிதருக்கும் உண்டு படிநிலை
மாற்றத்தின் கதவுகள் வளர்பிறை
இளமைக்கு இல்லை தடையேதும்
முதுமைக்குள் முடங்கும் தன்னார்வம்
பசுமையின் இலைபோல பளபளப்பு
சருகுகள் போல சாய்ந்திடுமே
எத்தனை பாடுகள் வரலாறாய்
எண்ணற்ற பாடுகள் சுமைதாங்கும்
பருவத்தின் கதவே பட்டறிவு
ஞாலத்தை சுட்டிடும் நல்லேடு!
நன்றி
மிக்க நன்றி .