சந்தம் சிந்தும் கவிதை

வசந்தா ஜெகதீசன்

மாசி.. மாசி
ஈராறில் ஒற்றையிவள்
இரண்டாம் திங்களிவள்
பருவத்தில் பனிப்பூவாய்
காலத்தில் கன்னிகையாய்
மாசியென மதிப்பாவாள்
மாந்தரிடை காதலர்தினமாய்
மனங்களில் இணைவாகும்
மாசியென உயர்வாகும்

மாசியின் மதிப்பேடு
மன்றுகள் பலநூறு
சிவனுக்கு ஓரிரவு
சிவராத்திரியாய் நற்பொழுது
பூரிக்கும் பூம்பனியில்
பூக்குமே மாசிமகம்
மாசியின் பேரேடு
மாற்றத்தின் பிறப்பேடு
உணவோடு ருசிக்கும்
மாசியும் மணக்கும்
வாழ்க்கையின் இருகூறாய்
வரவேற்று வாழ்வோம்
வளமான மாசியே வரமாகும் தினமாய்!
நன்றி