வியாழன் கவிதை

வசந்தா ஜெகதீசன்

கடந்து வந்த பாதையில் ….
நிறைதமிழில் நித்திலமாய் மலர்ந்திட்ட வனப்பு
நிதமுமாய் தமிழ்மொழியில் உருவாக்கச் சிறப்பு
வளம்சேர்க்கும் வற்றாத சுரங்கமாய் மிளிர்வு
வலம் வந்த நிறைவதே இலண்டன்தமிழ் வானொலி மிடுக்கு

அயராத ஊக்குவிப்பில் அர்ப்பணமே கொடையாய்
ஆக்குதிறன் வளர்ச்சியிலே உருவாக்கம் மடையாய்
எழுத்தாக்கம் படைப்பாக்கம் தொகுப்பாக்கம் தொடராய்
தொடர்வடமாய் தொண்டாற்றும் படைப்பாளர் மிகையாய்

கடந்து வந்தபாதைக்கு சரிதமுண்டு வலுவாய்
கவிதைநேரம் இன்றாகும் எண்ணிக்கை உரமாய்
அனுதினமும் மொழிவளர்ச்சி முதலீட்டுச் சிகரம்
இளையோரும் மற்றோரும் இணைகின்ற மகுடம்
எண்ணற்ற நிகழ்வுகளின் தொகுப்புகளின் இமயம்
எண்திசையும் பாமுகத்து படைப்பாற்றல் உலவும்

யூரூப்பில் விரலசைக்கும் வியூகமே இன்று
அடுத்துவரும் தலைமுறையும்
அணிதொடரும் நன்று!

நன்றி மிக்க நன்றி