சந்தம் சிந்தும் கவிதை

லக்சிகா தவகுமார்

லக் ஷிகா தவகுமார்
சந்தம் சிந்தும் சந்திப்பு-11

பரவசம்

சிரிக்கும் மழலையை பார்த்தால்
தாய்க்கு ஏற்படும் பரவசம்!!

தவிக்கும் குழந்தைக்கு தாய்ப்பால்
கிடைத்திட்டால்
மழலையின் முகத்தில் பரவசம்!!!

பசித்திருப்போருக்கு பந்தியிலே உணவு கிடைத்தால் பரவசம்!!!

கடவுளைக் கண்டால் பக்தருக்கு பரவசம்!!!!

கதிரவன் ஒளியைக் கண்டால்
காணும்  உயிர்களுக்கு பரவசம்!!!

பரீட்சையில் வென்றால் மாணவருக்கு  பரவசம்!!!

துள்ளியோடும் சிறார்களை பார்த்து
எம்  இளமை நினைத்து பிரவசம்!!!

உங்கள் திரு வாயால் என் நாமம் உச்சரிக்க
என் மனதில் உண்டாகும் பரவசம்!!!
சந்தம் சிந்தும் சொல்லெடுத்து
வாழ்த்துக்கள் பெற்றதில் அடைந்தேன் நல்பரவசம்!!!!

நன்றி !!! வணக்கம்!!!
23.01.22