சந்தம் சிந்தும் கவிதை

ராணி சம்பந்தர்

25.06.24
ஆக்கம் 152
நடிப்பு

கோடி மக்களில் நாடியதோ நடிப்பு
தேடிய தூக்கமதில்
மூடியதோ தடிப்பு
வாடிய முகமதில்
வடித்ததோ வெடிப்பு
ஆடிய ஆட்டத்தில்
அடங்கியதோ துடிப்பு

கூடிய கூட்டத்தில் கள்ளக் குறிஞ்சி சிதறடிப்பு
நாடிய நாட்டமதில்
நீடிப்பு
குடியே குடியைக் கெடுத்த கதறடிப்பு
கொடிய விஷமே
உயிரடிப்பு

நெடிய வாடை நோண்டி
நொடிப்பொழுதில் பிண
மூடை தோண்டி மூடிய
விழிகள் பாடிய சோடிப்பு

வாடிய மாதரில் கண்
சிமிட்டிக் கண்ணீர் விட்டுக் கதறிய மதுவில்
மீண்டும் வரவேற்கும்
மெத்தலீனின் நடிப்பு.
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து