சந்தம் சிந்தும் கவிதை

ராணி சம்பந்தர்

11.06.24
ஆக்கம் 150
பாமுகமே வாழி

பகலவன் முகம் நெடு
நேரம் ஒளி வந்திடுமே
27 ஆண்டு நிறைவுப்
பாமுக இலண்டன் தமிழ்
வானொலி தொலைக்
காட்சியோ காலை மாலை என ஒலி ஒளி
தந்திடுமே

சகல தாகம் சேர கண்
கவர காதில் புகுர நிகழ்வு முகர மணம்
பரப்பி மனம் நிறைய
சிறுவர் பெரியோர்
சுற்றம் சூழ இனிதாய்க்
கனிந்திடுமே

தாமே தயாரித்து அகல
விரிக்கும் பாகம் உரமிட
வாசிப்பு,உரை அரும்பு
வாசனை முகிழும் முகங்கள் செல்லக் குரல்
பேர் புகழ் தொடர்ந்திடுமே

நேர் முகமாய்ப் புலம் பெயர் மண்ணில்
பாமுக அதிபர் நடா மோகன், வாணி மோகன், சங்கவி
போற்றிட பாமுக உறவுகள் பாமாலையில்
பூமாலையிட்டு பல்லோரும் பாமுகமே வாழி என வாழ்த்திட
விரைந்திடுவோமே
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து