சந்தம் சிந்தும் கவிதை

ராணி சம்பந்தர்

28.05.24
ஆக்கம் 148
வேள்வி
சுற்றி வந்து அடித்த அலாரம் போல் அதிகாலை 5 மணி
தொற்றிய ஓலம்
போற்றிய காட்டு வைரவர் வேள்வி
சற்று உரத்து வெடித்து
அழைத்தது பறை மேளம்

வீதியில் பெருவாரி ஊற்றுச் சீர் வரிசை
பாதி மொழிக் கூற்று
“மே ,மே எனச் சேதி
சொல்லும் நாதியற்ற
பீதியில் பரிதாபக் குமிறல் பார்வை விழியில்

நெற்றிப் பொட்டு கழுத்தில் பூமாலை
பற்றிப் பிடிக்கும் கயிறு
கல்யாணக் கிடாய்
மாப்பிள்ளை ஊர்வலம்

அடுத்த சில நிமிடம்
கழுத்து அறுத்து தலை
வேறாக்கும் பார்த்த
சாரதிக்கு முண்டம்
ஆக்கும் மரண
தண்டனைக் கைதிக்குத்
தினமும் தடவித் தடவி
உணவூட்டிய கையே

இரத்தஞ் சொட்டச் சொட்டப் பலா மரத்தில்
தொங்க விட்டுத் தோல்
உரித்துப் பங்கு போட்டு
உண்ட இறைச்சி
தொண்டையில் சிக்கியதே வளர்த்த கடா
மார்பில் பாயாதே
அடுத்த வேள்வியிலும்
சொல்ல முடியாது விக்கியதே .
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து