சந்தம் சிந்தும் கவிதை

ராணி சம்பந்தர்

30.01.24
ஆக்கம் 132
மாசி

மாசிப் பனி புல் நுனி
பூ மொட்டழகாய் முட்டும்
வாழை,மாவிலையில்
துளி நீர் சொட்டுச் சொட்டாய்ச் சொட்டும்

மாசி வெப்பமோ கண் கூசி மின்னிடும்
மூசிய பனிப் புகையோ
பேசி மேனியிடும்
நாசி அடைத்து நீர் வடிய
தூசி குடைந்து தும்மிட

பாதித் தூக்கமோ வெடிக்கும்
மீதி சொல் வராது
வாய் தந்தி அடிக்கும்

சோதி வடிவில் மாசி மகம், சதுர்த்தி விரதம்
நினைவு வர சோர்வு
இன்றிய உற்சாகம்
பொங்கிடுமே .

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து