சந்தம் சிந்தும் கவிதை

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

30.05.23
கவி இலக்கம்-104
மூண்ட தீ

பார் போற்றிய யாழ் நூலகம்
பன்னிரண்டு மணிக்குத் தீ
மூண்டதே

பேர் ஆற்றிய தமிழ் வேரோடு
எரிய என்ன பாவம் செய்ததே

வரம் பெற்ற வரலாற்று நூல்கள்
ஏன் என ஏங்கிக் கொண்டதே

மூண்ட தீ கண்ட எழுபத்தி நாலு
வயது தாவீது அடிகளார் மூச்சு
மாரடை்பால் நின்றதே

பண்டைய பனையோலை கொண்ட
அடிச்சுவடு,ஆதார ஆவணங்கள்
எரிந்து சாபம் பூண்டதே

அழிக்கத் தெரிந்தவனை ஒழிக்க
அவன் உதிரமே விழிப்புணர்வோடு
முழித்துக் கொண்டதே

எரிந்த சாம்பலில் பிரிந்த தீப்பொறியில்
மூண்டதீ கவிண்டு போன அரசியலில்
கொழுந்துவிட்டு எரியவே

துவண்டு போன வலிகள் தூரவே நின்று
இரண்டு கைகளும் தட்டி மூண்ட தீ
கண்டு மகிழ்கிறதே.