25.08.22
ஆக்கம்-240
தேடும் விழிக்குள் தேங்கிய வலி
தேடும் விழிக்குள் தொலைத் தூரமான துயரங்கள்
கூடி உறங்கிய உண்மைகள் ஊமையானதே
தமிழனாய்ப் பிறந்து குலைந்து போய்
வெந்து வெதும்பிய அழிவுகள்
அழுது அழுது வீங்கிய கண்களில்
என் உறவு எங்கே என
ஓலமிடும் ஆண்கள் பெண்கள்
நேற்று ,இன்று ,நாளை என்று
எத்தனை வருட வலி
எங்கு எதைப் பார்த்தாலும்
பிரிந்து போன முகங்கள்
இன்னும் விடை தராத தாகங்கள்
விடையே இல்லாத வினாவிற்குள்
தாங்கிய உள்ளமோ தேங்கிய
வலிக்கு கண்ணீர் மட்டுந்தானே
மருந்தாகின்றது