17.05.22
ஆக்கம்-59
தீயில் எரியும் எம் தீவு
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையுமே
முதுமொழியோ மூட்டி விட்டதே
பதுங்கு குழியில் பாதாளச் சிறையிலே
பிதுங்கிய விழியுடன் ஒதுங்கியே போயினரே
கதறக் கதற குத்தி எடுத்த சிறுநீரகக் குதறலது
போற்றும் பச்சைப் பாலனை பிஸ்கற் புகுத்தி
மூச்சை முடித்த இதயத் துடிப்பது
கொத்துக் குண்டால் பொத்தென விழுந்து
உடல் கிழிந்து உதிரம் சொரிந்து உயிரோடு
புதைந்த கூக்குரலது
மாவீரர் துயிலும் இல்லமதை இடித்தழித்த
மிருகத்தைத் துரத்த ஈன்றவர் மனதில் புகைந்த
தீப்பந்தமே எம் தீவில் பற்றி எரிகின்றது