வியாழன் கவிதை

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

17.03.22
கவி ஆக்கம்-223
பறக்கும் ஊழல்
உலகைச் சுற்றிடும் ஊழல் பாரினிலே
பலகாலமாய்த் தொற்றிடும் போரினிலே
ஏனோதானோ இது தேவைதானோ
ஏங்கித் தவிக்கும் ஒவ்வோர் ஊரினிலே

காலில் விழுவது போல் விழுந்து
காரியம் சாதிக்கும் அமெரிக்கா
பேர் போன தமிழன் கரை சேர்க்க
மறுக்கும் வெள்ளரிக்கா

வாரோட்டமோட நினைக்கும்
சீனா,ரஷ்யாவால் உத்தரிக்கும்
சித்திர விளையாட்டால்
தந்திரமாய் மூடி மறைக்கும்

பத்திரமாதத்து தங்கங்களான
மந்திரிமார் சுதந்திரம் கிடைக்கக்
கூடாதென்று ஊழல் உல்லாசமாய்
உபத்திரவமன்றி பறந்திடுதே.