சந்தம் சிந்தும் கவிதை

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

15.03.22
கவி ஆக்கம்-55
சிக்கனம் சிக்கலானது
சிக்கனம் என்பது சமூகத்தில் சீரழிந்தது
சுக்குநூறாய்ச் சிதைந்து சூனியமானது
முக்கித்தக்கி மூச்சு முட்டி முள்ளந்தண்டு வலித்தது
உண்ணாமல் உறங்காமல் ஊக்கமாய் உழைத்தது

கொஞ்சம் கொஞ்சமாய் மிச்சப்படுத்தியது
ஏழை எளியவர்க்கு ஊன்றுகோலானது
போர் அனத்தங்கள் நாட்டுக்கு நாடு
போட்டி போட்டு ஆண்டாண்டு வாழ்ந்தவர்
அகதியாயினர்

குண்டு போட்டுக் கொடூரமானதால்
முக்கியமானவை முடக்கப்பட்டன
தடைச்சட்டம் மும்முரமாயின
உயர்ந்தது விலைவாசி பறந்தது வேலையாயிட
சிக்கனம் காண்பது வீட்டுக்கு வீடு சிக்கலாய்ப்
போனதுவே.