வியாழன் கவிதை

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

10.03.22
கவி ஆக்கம்-219
உன்னதமே உன்னதமாய்
கன்னம் வைத்த காவலில்லா காம வெறியர்
அன்னம் கொடுத்த ஆடவர்க்கே
பொன் ,பொருள் போக்கிரியாய் அள்ளி
மானபங்கப்படுத்திய பூத கணங்கள்
மதங்கொள்ளாது நன்றியுடன் மாதரில்
உன்னதமாய் உத்தமராவாரா

கன்னம் துளைத்து சாவைச் சுக்குநூறாக்கி
சினங்கொண்டு சிக்கித் தவிக்கும் சீவாத்மா
மனம் நிறையாது மக்கி மண்ணுள் போகமுதல்
மண்ணாசை அரசியல்வாதிகள் உள்ளம் மாறி
உன்னதமாய் உன்னதமாவாரா

பென்னம் பெரிய ஆணவ ஆட்சி வெறி
கண்டம் விட்டுக் கண்டம் பாயும் அணுகுண்டே-உன்
அக்கிரமம் தொலைந்து ஆட்டமடங்கி ஆணியடித்து
முத்திரை குத்தி மூக்கணாங்கயிறு தொங்கிட
உக்கிரையின் போர் தணிந்து சுடரொளி ஏற்ற
உன்னதமே உன்னதமாயிடுமா