வியாழன் கவிதை

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

03.03.22
கவி ஆக்கம் 215
விடியலின் உன்னதம்
துடிக்கும் இதயம் தூண்டும் விடயம்
படிக்கும் போதெல்லாம் போராடும் தடயம்
வெடிக்கும் இன்னல் ஊர்வலமாய் வேடிக்கையிட
துடிக்கும் உயிர்கள் கூக்கிரலிடும்

அன்றிலிருந்து இன்றுவரை ஆவேசம் தொடரும்
என்றென்றும் பதிலில்லாத வித்தை ஏமாற்றிடும்
ஜெனிவா தொடங்க ஜோராக் கைதட்டி
சோடித்து அலங்கரித்தவை பூச்சாண்டி காட்டிடும்

தமிழனை ஏமாளியாக்கும் கோமாளித்தனம்
சவால்கள் ஏவிவிட்டு சான்றுகள் சூறையாடும்
வல்லரசுகள் வர்ணஞாலம் காட்டி வெற்றுக்
காகிகத்தின் விம்பம் வேறு

எம் இனமழித்த உக்கிரையின் போர் விமானம்
சுக்கு நூறாகி தம்மினமிழந்த வரலாறு
மழுப்பும் நியாயங்கள் மாந்தரில்
உலகெங்கிம் சன்னதமாடும்
விடியலின் உன்னதம்.