சந்தம் சிந்தும் கவிதை

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

01.03.22
கவி ஆக்கம்-53
பொறுக்கிய கூறுகள்
சோலையானது கடுங்குளிரிலே சோகவனமானது
பாலைவனமானது நெடுங்காற்றிலே போர்க்களமானது
காலநிலையானது கவலையின்றி கட்டிப்புரண்டு
பிரளயமானது

மாரி மழையோ மிச்சம் மீதியின்றி
சோ என்று சொச்சமாய்ச் சொட்டுப் போட்டு
குளம், குட்டை நிரப்பி சமுத்திரமாய் புரண்டு
கரையோடியது

பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும் என்றிட
கிடு கிடுவென கடுகடுப்பான சூறாவளி எடுத்த
எடுப்பில் ஏழைக் குடிசையைத் தூர எறிந்தது
தொடுப்பான கூரை,ஓடும் கடுகடுப்பாகி பொறுக்கிய
கூறுகளாய் நொருங்கி உடைந்ததே