சந்தம் சிந்தும் கவிதை

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

22.02.22
ஆக்கம் 52
சாந்தி என்ற பெயரோ சிம்மாசனம் ஏறியது
முந்திய காலமோ சினிமாவில் மூழ்கியது
சாந்தி கதாநாயகி காதல் முத்திரை பதித்தது

ஆண்கள் இதயம் படபடவென அடித்தது
வேண்டாத காதலிற்காக ஏங்கித் தவித்து
கண்களில் வைத்து மனதோடு
ஒத்திகை பார்த்தது

ஒரு காதல் கை காட்டியது
இன்னொன்று உதறித் தட்டியது
சுள் என்று முள்ளாய்க் குத்தியதும்
புள்ளி போட்டது வதந்தியாய்
மாறியதும் மனதில் சாந்தி இன்றி
மறக்கமுடியாத சாந்தியை நினைத்து
வாழும் காதலரே என்றும் வாழ்க.