17.02.22
கவி ஆக்கம்-207
உருமாறும் புதிய கோலங்கள்
ஆண்டாண்டு தோறும் புலம்பி அழுது
வேண்டாத வேறு வினை சுமந்து
தீண்டத்தகாத பழக்க வழக்கம் புகுந்து
கண்டு கொண்ட இன்பமது மீண்டும்
தொடரவும்,மறக்கவும் முடியாது பிணைந்து
புதுப்புது ரசனைகள் மயங்கி பூகம்பமாயிட
குதூகலக் குடும்பம் குலைந்து கூண்டில் நின்றிட
பாதுகாவலனோ பாழாய்ப் போன மது,மாது
போதையில் பொத்தென புகுந்தழித்திட
கட்டிய மனைவி கண்ணீருஞ் சோறுடன்
காவல் காத்து பெற்ற பிள்ளை வெறுத்து
மன அழுத்தத்தில் மாறுபட்ட முடிவெடுக்க
கொன்றது கொரோனா என்று வேலையின்றி
நாளும் பொழுதும் வீட்டில் இருந்து தொடரும்
பாதகச் செயலில் உருமாறும் கோலங்கள்
மாறாதா?