15.02.22
கவி ஆக்கம்-51
துடிக்கும் காதல்
அடிக்கடி நேரம் பார்த்து ஆனந்தமானது
துடிதுடிககும் இதயம் தூர தேசம் போனது
மடிக்கும் இமையோ எத்தனை மணி
அங்கிருக்குமெனக் கணக்குப் போட்டது
பிடித்த காதலிற்கு ஒரு தூது விட்டது
நினைத்துப் பார்க்க நீந்திக்கரை சேருமா
வினையறுத்து விடையின்றி வீணாகிப்
போயிடுமோ
கனத்த உள்ளமோ பயந்து யோசித்தது
மண்ணில் புதையும் இவ்வுடலுக்கு
ஏனிந்த வீராப்பு என்றது
கண்ணில் பட்டு நெஞ்சில் தொட்ட
காதல் நெஞ்சாரத் தழுவிக் கொண்டது
விண்ணில் வீரிய இறக்கையுடன்
“துடிக்கும் காதலே நீ வாழ்க “என்ற
பட்டமுடன் பறந்தது.