சந்தம் சிந்தும் கவிதை

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

08.02.22
கவி ஆக்கம் 50
என்றும் திருந்துமா
குறுகிய வாழ்வு கூறுபாடாயானது ஏனோ
விறுவிறுவென்று நாகரீகம் வளர்ந்தது தானோ
கூறு பிழிந்து கோவிட் நுழைந்ததும் ஏனோ
வேறுவேறாய்க் கிழிந்து நாகூறு பட்டது ஏனோ
தாறுமாறாய்த் தனியே பிரிந்தது சரி தானோ

வேணாம் வேணாம் அந்தத் தவறு
போதும் போதும் இந்த வரலாறு
வெந்து வெதும்பும் அகதி மண்ணில்
முட்டி மோதி வேலை வெட்டி இன்றி
குட்டி, புட்டியுடன் தெருவில் சுற்றித்
திரியும் பருவக் கோளாறு

நாளும் பொழுதும் தொழுதோமன்று
வீழும் போதும் மாளும் போதும்
தொழுகிறோமின்றும்
குடியும் ,கொடிய நோயும் பாழாய்ப்போன
பொடி பெட்டையும் என்றும் திருந்திடுமா?