10.02.22
கவி ஆக்கம் 203
துரத்தும் பாவம்
பத்து மாதம் வயிற்றிலே சுமந்த போது
எத்தனை உதை,வலி,வேதனை
இத்தனையும் தாங்கி வளர்த்தவள்
அத்தனை சுதந்திரமாய்
சற்று பெரியவனாய்த் திருமணமானபோது
பெற்ற தாயைப் பேரிடியாக நினைத்து
கற்றுத் தந்தவளை முதியோர் இல்லத்தில்
சேர்த்தானே மனைவி சொல் மந்திரமாய்
அரசன் அன்று கொல்ல தெய்வம் நின்று கொல்ல
நன்றி மறந்தவனைப் பெற்ற மகனே
சொத்தைப் பறித்து விட்டுத் தள்ளி விட்டான்
வயோதிபர் இல்லத்திலே வாய் பூட்டித் தந்திரமாய்
செய்த பாவம் துரத்துகிறதே
அன்புத் தாய்க்கு” நான் செயத கொடுமையே”
பேச்சு மூச்சின்றி இழுத்துக் கிடக்கும் ஜீவனில்
கண்ணீர் மட்டும் சொரிகிறது.