வியாழன் கவிதை

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

03.02.22
கவி ஆக்கம் 199
பூக்கட்டும் புன்னகை
பூக்களை வண்டு நுகர்ந்து
மகரந்தச் சேர்க்கை பகிர்ந்து
காய் கனி கண்ட விதை
கொண்டு மரமோ சிரிக்கிறது

ஆனால் மனிதன் மட்டும்
எதைக் கண்டும் சிரியான்
வாய் முத்துக்கள் உதிர்ந்திடும்
என்ற பயமோ?

காசைக் கொடுத்தாலும்
சிரியாது அழுவான்
நுள்ளினால் பேயறைந்தது
போலாவான்
எதைக் கண்டு பயந்தானெனக்
கோவிட் இவனைக் கண்டு
சிரிக்கிறது

சிரிப்பதற்கு தடுப்பூசி போடட்டும்
கோவிட் கொக்கரிக்கிறது
“வாய் விட்டு சிரி நோய் விட்டுப்
போகும்”என்கிறது
இனியாவது பூக்கட்டும் புன்னகை.