சந்தம் சிந்தும் கவிதை

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

01.02.22
கவி ஆக்கம்-49
வாழ்க்கை எனும் ஓடம்
ஒரேயொரு தரம் ஏறும் ஓடமிது
நாளும் பொழுதும் படிக்கும் பாடமிது
இரவும் பகலும் துடிக்கும் தவிப்பிது
ஆணும் பெண்ணும் இணைந்த
சொந்த பந்தமதில் நடித்திடும் நாடகமிது

அன்பு,இரக்கம்,பொறுமை,புரிந்துணர்வு
ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்குமது
ஆணவம்,கோபம்,அகங்காரம் குறைய
பலகாலம் ஓடும் இரட்டை மாட்டு வண்டியது
கோடி கோடி இன்பந் தந்து கூடி
மணம் பரப்பும் வாச மலரது

உலாவி வரும் இந்த அற்புதத் தேரினிலே
அளவிலா ஆனந்தம் மனதினிலே
இனித்திடும் அற்புத சுவையான கனியது.