வியாழன் கவிதை

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

27.1.22
கவி ஆக்கம் -195
தாய் மொழி
பேசும் போதெல்லாம்
ஆங்கிலத்தில் உளறியவள்
பிரவசத்தின் போது “அம்மா”
தமிழ் சொல்லையும் சிசுவையும்
சேர்த்துப் பிரவசித்தாளே

பிறமொழி பேசி தமிழ் மொழி மறந்து
அந்நிய கலாச்சாரம் புகுந்து
குலைந்திடும் வாழ்வு நிலைதடுமாறுதே

அடுத்த சந்ததி ஆவலாய்க் காத்திருக்கும்
கொரனா கோவிட் பெற்றெடுத்த
புதுப்புது பெயர்தான் மந்திரவாதி
தந்திரதாய்த் தத்தெடுப்பாரோ?