சந்தம் சிந்தும் கவிதை

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

25.01.2022
ஆங்கிலப் புத்தாண்டே வருக
கவி ஆக்கம்-48
ஆயிரம் அர்த்தம் கூடி
ஆனந்தம் நாடி
பிறந்த ஆங்கிலப் புத்தாண்டே
வருக புத்தொழி தருக

கடந்த காலம் போலில்லாது
காலத்தின் கோல அலைகள்
தாவிடும் நோய்கள்
காவிடும் கிருமிகள் அழித்திடு

சிறுவர் சிறுமியரில் பற்றிடு
சுற்றஞ் சூழ கூடிக் குலாவி
சிரித்து மகிழ சீக்கிரம்
சுதந்திரம் தந்திடு

தேடிய அறிவை
கூடியழித்த விஞ்ஞானம்
கோடி கொடுப்பினும்
போன உயிர் மீண்டிடுமோ?
இவ் வருடமாவது நல் ஒளி
தந்து பல்வழி காட்டிடு.