வியாழன் கவிதை

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

20.01.2022
கவி ஆக்கம் 191
கொண்டாட்டக் கோலங்கள்
கொண்டாட்டமோ பலருக்கு
திண்டாட்டமோ சிலருக்கு
கொண்டாட்டக் கோலம்
துன்பப்பட்டவருக்கு புண்பட்ட
நெஞ்சமானதே

கண்ட கண்ட பலகாரத்தைச்
சுட்டு வேண்டாதவர்க்கு
அழைப்பை விடுத்து
தடிகொடுத்து அடிவாங்கும்
கூத்தாடியே!

மதுபானப்புட்டியும்,மாதுக்குட்டியும்,
போதை வஸ்தும் போதாக்குறைக்கு
அளவு மீறி வீணாப் போகும்
உணவுப் பட்டியலும் வயிறு நிறைய
வந்தவரை”நீ யாரெனக்” கேட்டிடவே

உண்ண உணவின்றி இருக்க வீடின்றி
படுக்க பாயின்றி அலைந்தவனுக்குப்
பஞ்சு மெத்தை கிடைத்தால்
சொல்லவும் வேண்டுமா?

சொல்லணாத் துயரம் சோகமாகும்
குடும்பமதில் அல்லும் பகலும்
தீராத வலிகளே திருந்தாத ஜென்மங்கள்
இருந்தென்ன லாபமதில் இளையவரும்
இவ் வண்டியில் ஏறிடுவாரோ?