சந்தம் சிந்தும் கவிதை

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

11.02.2022
கவி ஆக்கம்-46
சோதனை
சாதனை படைப்பவனிற்கு ஏனிந்த சோதனை
வேதனை தாங்காதவனிற்கு வநத போதனை
வெந்து வெதும்பிப் பூஜிப்பவனின் ஆராதனை

அல்லும் பகலும் ஆடி ஓடி உழைத்தவன்
முதுகில் ஏறிக் குந்திய ஊசிதனைப்
பிடுங்க முடியாத நிந்தனை

கண்கள் கசக்கும் காலம்
காணும் ஜீவனை விதம்விதமாக
வடிவம் மாற்றித் துரத்தும்
சதிகாலனின் காந்தக் கணைகள்

புது வருடம் பிறந்ததே போற்றும் காலம்
வந்திடுமென நம்மை நாமே ஏமாற்றிட
குதித்ததே குள்ள நரியாய் தடுப்பூசி
முனைகள்