வியாழன் கவிதை

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

06.01.2022
கவி ஆக்கம் 183
மாற்றத்தின் திறவுகோல்
நூற்றாண்டு பல கடந்தும்
இற்றை வரைக்கும் ஆற்றாமை
தோற்ற வரலாறு உரைக்கும்

ஒற்றுமை என்பது சுற்றுமுற்றும்
பற்றில்லாதொன்றெனப் பரிதவிக்கும்
முதிர்ந்தோர் பின் நின்று
இளையோர் முன்னிற்கத் தம்
அனுபவம் கலந்துரையாட
நன்மை பயக்கும்

பூட்டிய அறை மூத்தோராய் -அதன்
திறவுகோல் இளையோராய்
நின்றிட நல்வழி பிறக்கும்
மனதில் உள்ளது வெளியே
பேசிக் கலந்து கதைத்தால்
வாய்ப்பு அதிகமாகும்

தொழில் வாய்ப்பு,கூட்டு முயற்ச்சி,
பசி, பட்டனி போக்க படித்தவரும்
விவசாயம் பனை,தென்னை
கைத்தொழில் பெருக்கிடபலன் பெருகும்
இயற்கைப் பசளை பூவரசு,இலை,குழை
பயன்பாடும் பள்ளியில் கணனி படிப்பும்
இளம் சந்ததியே மாற்றத்தின் திறவுகோலாகும்.