சந்தம் சிந்தும் கவிதை

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

02.05.23
ஆக்கம் – 100
நடிப்பு

படிப்பில் புரியாத பாடம்
அடிப்பில் அம்மியும் நகரும்-போல
துடிப்பில் பிடித்ததே நடிபபு

குடிமகனில் பூத்ததே வெடிப்பு
நடிகனில் நாடகமோ நீடிப்பு
படிதனில் ஊடகமோ பன் நடிகனாய்
சோடிப்பு

விடை தேடி விதைக்கப்பட்ட
வினாவில் அறுவடை
நாற்றே நடிப்பு

வீடு தேடி வந்து கோடி கோடியாய்ப்
பணம் கொட்டி கொடி
கட்டிப் பறந்ததே

உழுது பயிரிட்ட விதையில்
பழுது இன்றிய விளைச்சலோ
விழுதானதே

நடிகனின் அற்புத நடிப்பு
நாற்றிசையிலும் போற்றிப்
போற்றிட நிமிர்ந்து புகழோடு
நின்றதே .