வியாழன் கவிதை

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

27.04.23
ஆக்கம் – 266
வளர்ந்த குழந்தைகள் தாமே
கூட்டில் இருக்கையில்
குறும்பு காட்டி வளருது
சின்னஞ் சிறியது

கூடு விட்டுப் போகையில்
வீறாப்பு கூட்டி வேகுது
பென்னம் பெரியது

குழந்தையில் குதூகலமானது
முதுமையில் முக்கலானது
எதுவும் செய்ய முடியாது
சிக்கித் தவிக்க ஏக்கமானது

ஏன் வெளியில் வந்ததென்று
மனம் வருந்தி மருண்டு ஓடுது
கனத்த இதயம்

எல்லாமிருந்தும் எட்டி எடுக்க முடியாது
வெட்டியான இதயத்தில்
முட்டி முட்டி உழைத்துக்
கழைத்து மல்லுக் கட்ட முடியாது
சொல்லாலும் செயலாலும்
வளர்ந்த குளந்தைகள் தாமே
என்றது .