சந்தம் சிந்தும் கவிதை

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

22.11.22
ஆக்கம்-84
கனவு மெய்யப்பட வேண்டும்

நினைவு உய்யப்பட்டு உமிழ் நீர் நனைக்கிறது
கனவு மெய்யப்பட வேண்டுமென்று
மனமோ உரத்துக் கனைக்கிறது

எங்கோ பிறந்து வளர்ந்து
இங்கே வந்து தங்கினோம்
வந்த இடத்தில் எல்லாமிருந்தும்
நிம்மதியின்றி ஏக்கமே கனக்கிறது

அந்த நாள் ஞாபகம் எந்த மூலையிலும்
சொந்த பந்தமும்,கூட்டுக் குடும்பமும்
கூடிக் குலாவியதும் நினைக்கிறது

எப்போ சொந்த மண் விடுதலையாகும்
அப்போ இந்த மண் துறந்து
பிறந்த மண் பறந்திட
இக் கனவு மெய்யப்பட வேண்டுமே.