சந்தம் சிந்தும் கவிதை

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

18.04.2023
ஆக்கம்-98
சுடர்
ஒவ்வொரு மாவீர தினத்தில்
மரணித்த வீரருக்கு ஏற்றுவது
ஈகைச்சுடரே

தன் உயிரைத் தானமாக்கி இன
விடுதலைக்காய் சொட்டு நீர்
ஆகாரமின்றி உயிர் நீத்த தியாகி
திலீபனைப் போற்றுவது தியாகச்சுடரே

மாணவர் பயின்று முன்னேறிட
ஆசரியர் ஆற்றுவது அறிவுச்சுடரே

தம் தேவைக் கனவைச் சுருக்கி
பிள்ளை நனவைப் பெருக்க
மெழுகுவர்த்தியாய் உருக்குவது
தீபச்சுடரே

சுடர் போடும் ஒளித்தீபம்
இடர் படும் போது பாவமே

ஆணவ அக்கிரமச் சூறாவளியில்
சிக்கித் தவித்துச் சுட்டெரித்து
சுக்குநூறாகும் பூமிப் பந்து .